வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தருமபுரி, சேலம்,கோவை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  நீலகிரி, தருமபுரி, சேலம் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறிய நிலையில்,  மாலத்தீவு, லட்சத்தீவு, கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை வடகடலோர தமிழகம், சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Related Stories: