கண்மாய், குளம், ஏரிகளில் களிமண் எடுக்க அனுமதி: முதல்வருக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் நன்றி

சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவரும், முன்னாள் வாரியத்தலைவருமான சேம.நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டங்கள் தொழில் செய்யவும் வண்டல் மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர்களால் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல மழை பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண் எடுத்து பயன்பெற்றிட இயலாத சூழ்நிலை இருந்தது. தற்போது இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி எளிதில் பெறலாம் என்று அறிவித்த முதல்வருக்கு மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post கண்மாய், குளம், ஏரிகளில் களிமண் எடுக்க அனுமதி: முதல்வருக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: