ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி!

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த நிலையில் சக கைதி மற்றும் பெண் காவலர்களுடன் நளினிக்கு மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நளினி மீது சிறை காப்பாளர் நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் வெளியானது.

இதன் காரணமாகவே நேற்றிரவு நளினி துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நளினியின் வழக்கறிஞரிடம் கேட்டதற்கு, நளினியின் தற்கொலை முயற்சியை சிறை காவலர்கள் தடுத்ததாகவும், அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் சிறைத்துறை உயரதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதே வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன்  ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 5 பேர் சென்னை, மதுரை உள்ளிட்ட வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: