முதல்வர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கை கோப்புகளை அனுப்பவில்லை: மத்திய உள்துறை செயலாளருக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கடிதம்

புதுச்சேரி: மத்திய உள்துறை செயலாளருக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கடிதம் ஆனுப்பியுள்ளார். முதல்வர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கை கோப்புகளை அனுப்பவில்லை என குற்றம் சாட்டினார். கோப்புகளை அனுப்பாமல் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக கூறினார். பட்ஜெட் தாக்கல் குறித்து நாளிதழில் பார்த்து தெரிந்து கொண்டேன் என தெரிவித்தார். நாராயணசாமியின் கடிதத்தையும் உள்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ளேன் என கூறினார். நேற்று புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடரை கவர்னர் கிரண்பேடி புறக்கணித்தார். இதனால், வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் உரையை நிறுத்தி வைத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கவர்னர் கிரண்பேடி, முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், துறை வாரியான நிதி ஒதுக்கீடு, நிதிநிலை அறிக்கை குறித்த முழு விவரங்கள் கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, பட்ஜெட் கூட்டத்தை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தார். இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார். எனவே, மீண்டும் தனியாக தங்களிடம் ஒப்புதல் பெற தேவையில்லை என முதல்வர் நாராயணசாமி கூறியிருந்தார். எனவே, துணை நிலை ஆளுநர் மரபுப்படி வந்து உரையாற்ற வேண்டும் என முதல்வர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் யூனியன் பிரதேச நிர்வாகியான துணை நிலை ஆளுநர் உரையை நிறுத்தி வைத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: