லா லிகா கால்பந்து தொடரில் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் டிரா செய்தது. பார்சிலோனா அணி தனது கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. ஸ்பெயினில் நடைபெற்று வந்த இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதின. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த தொடர், கடந்த மாதம் மீண்டும் தொடங்கி நடந்தது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த பார்சிலோனா அணியை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய ரியல்மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.