கொரோனா பாதிப்பு எதிரொலி: நடப்பாண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு..!!

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தாண்டு  நடைபெறவிருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்  கொரோனா எதிரொலியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வரும் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடத்த ஐசிசி முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகக்கோப்பை தொடரை நடத்த ஆஸ்திரேலியா மறுத்து வந்தது. மேலும், உலகம் முழுவதும் பரவி வரும் நோய் தொற்றினால், மற்ற நாடுகளும் இந்தத் தொடரில் பங்கேற்பதில் சந்தேகமாகியுள்ளது.

இதனையடுத்து வீரர்கள் இந்தத் தொடரை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தத் தொடர் குறித்து ஐசிசி இன்னும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுமா.. இல்லை ஒத்திவைக்கப்படுமா..? என்பது குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்ய வாய்ப்பிருப்பதாக ஐசிசி நிர்வாகத்தில் இருந்து தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் இந்தாண்டு  நடைபெறவிருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: