ஜாலி மையங்களானது தனிமை மையங்கள் ஹே, உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா... தய்யடா...மும்பையில் 40 வயது பெண் பலாத்காரம்

பன்வெல்: கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள், நாடு முழுவதும் தனிமை மையங்களில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர். இவற்றில் தங்கி இருப்பவர்கள் தங்களுக்கு கெரோனா தாக்கி இருக்குமோ என்று மருந்துவ பரிசோதனை முடிவு வரும் வரையில், பீதியில் இருக்கின்றனர். ஆனால், பலருக்கு இந்த தனிமை மையங்கள், ‘ஜாலி’ மையங்களாக மாறி விட்டது. இரு தினங்களுக்கு முன் கூட, மத்திய பிரதேசத்தில் உள்ள தனிமை மையத்தில் ஒரு பெண் ஏட்டு, தனது கள்ளக்காதலனை கணவன் என்று கூறி அழைத்துச் சென்று கும்மாளம் அடித்தது வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில், மும்பையில் உள்ள தனிமை மையத்தில் தங்கியிருந்த 40 வயது பெண்ணை, வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.

மும்பையில் உள்ளது பன்வெலில் அமைக்கப்பட்டுள்ள குவாரன்டைன் மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 40 வயது பெண் சேர்க்கப்பட்டார். அதே குவாரன்டைன் மையத்தில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்த 25 வயது வாலிபரும் கொரோனா அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரது தொண்டைச்சளி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று மாலை 6.30 மணியளவில், 40 வயது பெண் தங்கியிருந்த அறைக்கு 25 வயது வாலிபர் சென்றார்.

பெண்ணிடம் பேச்சுக் கொடுத்த அவர், அறையில் வேறு யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு., அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் பன்வெல் ஊரகப் போலீசில் புகார் செய்தார். இதன் ேபரில், வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ‘‘அவரது பரிசோதனை முடிவு இன்னும் கிடைக்கவில்லை. அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், சிகிச்சைக்கு பிறகு கைது செய்யப்படுவார். தொற்று இல்லை என தெரியவந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்,’’ என்றார் போலீஸ் அதிகாரி.

Related Stories: