2 தொற்றுநோயை வென்று சாதித்து காட்டிய 106 வயது முதியவர்

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட 106 வயது முதியவர் தனது மகனை விட விரைவாக குணமடைந்துள்ளார். டெல்லியை சேர்ந்த 106 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய் தொற்று இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், 70 வயதாகும் மகனை விட மிக விரைவில் முதியவர் குணமடைந்துள்ளார். இதுமட்டுமன்று இவர் மிக கொடிய ஸ்பானிஷ் காய்ச்சலையும் சந்தித்துள்ளார். அப்போது இவர் நான்கு வயதாக இருந்துள்ளார். மேலும் 102 ஆண்டுகளுக்கு முன் 1918ம் ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் உலகையே உலுக்கி எடுத்தது. அமெரிக்காவில் மட்டும் காய்ச்சல் பாதித்த 6,75,000 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் 4 கோடி பேர் உயிரிழந்தனர். முதல் உலகப்போரில் பங்கேற்று திரும்பிய வீரர்கள் மூலமாக இந்தியாவில் இந்த நோய் பரவியது. உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உயிரிழந்தனர்.

Related Stories: