ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டம் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு: கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!!

டெல்லி: நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ரூ.50,000 கோடியில் தொழிலாளர்களின் நலன், ஊரக பகுதிகளில் வேலை வாய்ப்பை பெருக்க புதிய திட்டங்களை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் அரசு ஏற்பாடு செய்த ரயிகள் மூலம் சொந்த ஊர் சென்று சேர்ந்தனர். நாடு முழுவதும் 116 மாவட்டங்களுக்கு புலம் பெயர் தொழிலாளர்கள் சென்று சேர்ந்துள்ளார். அதிக  புலம் பெயர் தொழிலாளர்களை கொண்ட மாவட்டம் எது என்பதை அரசு கணக்கெடுத்து வருகிறது.  இதனையடுத்து 25 திட்டங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தொழிலாளர்களின் திறனுக்கு ஏற்ப வேலைகளை உருவாக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணி வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு எதிராக நடுத்தர மக்கள் போராடுவதற்கு உதவுவதற்காக பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ 1.70 லட்சம் கோடி நிவாரணத் தொகுப்பை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் கடந்த மார்ச் 26ம் தேதி அறிவித்திருந்தார். ஏழைகளிலும் ஏழைகளாக உள்ளோரின் கைகளில் பணமும் உணவும் சென்றடைவைதற்காக இன்றைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கும், அவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவர்களுக்கு சிக்கல்கள் இருக்காது என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து வருகின்ற ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டத்தில் நலன் பெறும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: