பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்: அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஊரடங்கு தொடக்கத்தில் ரூ.72.28 இருந்த பெட்ரோல் இன்று ரூ.77.96; ரூ.65.71 இருந்த டீசல் ரூ.70.64-க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வு வாகனங்கள் வைத்திருப்போரையும், ஏழை, எளிய நடுத்தர மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு புறம் ஊரடங்கு தளர்வு அறிவித்து விட்டு, இன்னொரு புறம் பெட்ரோல், டீசல் கட்டண உயர்வு என மக்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு. பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: