கொரோனா சுனாமிக்கு தகவல் தொழில்நுட்பத்துறையும் தப்பவில்லை: உள்ளூரில் வேலை பறிபோய் இளைஞர்கள் தத்தளிப்பு

*  வெளிநாடுகளில் வேலை இழந்து திரும்புவோர் அதிகரிப்பு

*  லட்சங்களை அள்ளித் தந்தது நேற்று வரை...

*  தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவில் வேலை பார்ப்பவர்கள் மொத்தம்

*  சம்பளம் குறைப்பு 20% - 50%

தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பிபிஓ நிறுவனங்களில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் வேலை இழப்பு நடப்பு நிதியாண்டில் ஐடி துறை சார்ந்த முதலீடு

8% - 12% குறைய வாய்ப்பு

(குறைந்த பட்சம் 8,350 கோடி டாலராக (6,34,600 கோடி) குறையும், இது 5 ஆண்டில் இல்லாத சரிவு. கொரோனா பரவலுக்கு முன்பு வெளியிட்ட கணிப்பில் முதலீடுகள் 6.6 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. உள் கட்டமைப்பு முதலீடுகள்13.2% குறையும். உள்கட்டமைப்பு புதிய முதலீடு, செலவினங்கள்15.1% குறையும்

*  இன்றோ தலைகீழாக  போனது சொகுசு வாழ்க்கை...

கொரோனா பீதி... ஓயாத ஊரடங்கு...எல்லா தொழில், வியாபாரங்கள் முடக்கம்...என்று இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பொருளாதார நிலை மண்ணை கவ்விக்கொண்டிருக்கும் போது, கடந்த சில ஆண்டாக கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்த ஐடி  என்று பல இளைஞர்களால் பெருமைபட தன் வேலையை சொல்லிக்கொள்ளும் தகவல் தொழில்நுட்பத்துறையும் கொரோனா சுனாமிக்கு தப்பவில்லை.   இந்தியாவின் பல மாநிலங்களிலும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு என்பது ஒரு பக்கம் உள்ளூர் இளைஞர்களை நிலைகுலைய வைக்க தத்தளித்து போய் விட்டனர். இன்னொரு பக்கம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள், அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் மூடப்பட்டு, சாரை சாரையாக இந்தியா திரும்பும் அவலம் தொடர்கதையாகி விட்டது.

நேற்று வரை லட்சங்களில் வாழ்க்கை சொகுசாக நீடித்து கொண்டிருந்தது போய், இப்போது தலைக்குப்புற புரட்டிப்போடப்பட்ட போது, இந்த இளைஞர்கள் எதிர்காலத்தை பீதியுடன் பார்க்க துவங்கி விட்டனர். இந்த நிலையை  மத்திய, மாநில அரசுகள் எப்படி சமாளிக்கிப் போகிறது என்பது கேள்விக் குறிதான்.  தொழில்நுறை மீண்டும் இயல்புக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறது. அதிலும் இந்தியாவுக்கு ஏற்றுமதி மூலமும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலமாகவும் அந்நிய செலவாணியை அள்ளித் தரும் தகவல் தொழில்நுட்பத் துறை(ஐடி)யும் தப்பவில்லை.   கொரோனாவால் தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மேலும் பல ஆண்டுகளுக்கு தொடரும் என்கிறார்கள். அதனால் உற்பத்தி குறைவு, விலை உயர்வு என மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். கூடவே அந்த துறைகளில் ஊதிய பிடித்தம், ஆட்குறைப்பு போன்றவை அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

  இப்படி கொரோனாவால் தொழில்துறைகள் பாதிக்கப்பட்டால், அதனை பின்புலமாக கொண்டு செயல்படும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கும் இப்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்டோ மொபைல் துறை கடந்த ஆண்டு இந்தியாவில் நலிவடைந்தபோது, அந்த துறைக்கு பின்புலமாக வடிமைப்பு, திட்டமிடல் போன்ற மென்மொருள் பணிகளில் இருந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பாதிப்படைந்தன. அதிலிருந்து ஐடி துறை  மெல்ல மீண்டு வரும் நிலையில்  கொரோனா அடித்து துவைக்க ஆரம்பித்திருக்கிறது.  அதிலும் அவுட்சோர்சிங் எனப்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக, அவர்களின் வாடிக்கையாளர்களுக்காக இங்கே இருந்து பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு  50 சதவீதம் வரை ஊதியத்தை குறைத்துள்ளன.

போதாதற்கு ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ரா இங்கிலாந்தின்  வெர்ஜின் போன்ற நிறுவனங்கள் கொரோனா பீதிக்கு இடையில் உள்ளூர் ஆட்களை அதிகம் நியமிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் அவுட்சோர்சிங் பணிகள் நடக்கின்றன. அதனால் இந்தியாவில் உள்ள இதன் ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும்  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இவை சிறிய நிறுவனங்கள் என்பதால் கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள். அதுமட்டுமல்ல இந்தியர்கள் வழங்கும் ஊதியத்தை விட கூடுதலாக வழங்க வேண்டும் என்பதால் அந்த நிறுவனங்களும் மீண்டும் இந்தியர்களுக்கே வாய்ப்பளிக்கும் என்கிறார்கள். ஆனால் அது வரை இந்திய ஊழியர்களின் வாழ்வதாரம் கேள்விக்குறிதான்.

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலைகள் ஏதும் இந்தியாவில் இல்லை. ஆனால் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி  செய்து ஒருங்கிணைக்கும் பணிகள் நடக்கின்றன. கொரோனாவால்  இறக்குமதி முற்றிலுமாக தடைப்பட்டுள்ளன. அதனால் கம்ப்யூட்டர்கள் மட்டுமின்றி உதிரி பாகங்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம்.   அதேபோல் செல்போன் ஏற்றுமதியும் கடந்த  2 மாதங்களாக முழுமையாக தடைப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்திருந்தாலும் போக்குவரத்து இல்லாததால்  ஏற்றுமதிக்கு வாய்ப்பில்லாத சூழ்ல் உள்ளது.  டிஜிட்டல் முறையில் ஆன்லைன் வணிகம் செய்யும் பல நிறுவனங்கள்   கொரோனா பீதிக்கு முழு அளவில் செயல்படவில்லை.

அதனால் அந்த நிறுவனங்களை நம்பி பொருட்களை பார்சல் செய்வது, பட்டுவாடா செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்த துணை நிறுவனங்களும், அதன் ஊழியர்களும் கடந்த 3 மாதங்களாக வேலை இல்லாமல், ஊதியம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் .  ஊர் திரும்பும் இந்தியர்கள் இந்தியாவுக்கான தகவல் தொழில்நுட்பத்துறை வாய்ப்புகளை பெருக்குவதில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள  நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்களின் பங்கு முக்கியமானது. கொரோனா பீதிக்கு பிறகு அவர்களில் ஏராளமானவர்கள்  வேலை இழந்து  நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  அமெரிக்காவில் கிரீன் கார்டு கிடைத்தவர்கள் கூட கொரோனா பீதிக்கு பிறகு ஊர் திரும்ப ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மண்ணின்  மைந்தர்களுக்கே வாய்ப்பு

அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் உள்நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் ‘மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை’ என்ற முழக்கம் அதிகரித்து வருகிறது. டிரம்ப் அதிபரான பிறகு அது அமலுக்கு வந்து விட்டது. அதனால் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருப்பவரகள் தாயகம் திரும்புவதற்கான வாய்ப்புகளை அதிகம். ெகாரோனா பீதியால் அமெரிக்காவில் மட்டும் 4.7கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அவர்களில் கணிசமானவர்கள் இந்தியர்கள்.

எப்படி சமாளிப்பார்கள்?

அவர்களின் இந்த முடிவு  இந்தியாவில் ஐடி துறைக்கு பெரும் பின்னடைவு என்பதை மறுப்பதற்கில்லை. அதுமட்டுமல்ல தாயகம் திரும்பும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர ேவண்டிய கட்டாயமும் இருக்கிறது.  ஏற்கனவே இங்குள்ள ஐடி ஊழியர்கள் வேலையை பறிகொடுத்து வரும் நிலையில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்க மத்திய, மாநில அரசுகளிடம் இதுவரை திட்டம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.  ெசல்பேசி  சேவை  கொள்ளை:  உலகம் முழுவதும் வீட்டிலேயே முடங்கியவர்களுக்கு தொலைக்காட்சிகளை விட செல்போன்கள் தான் அதிகம் ெபாழுதுபோக்கு சாதனமாக மாறியது. எப்போதும் செல்போனும் கையுமாக மனிதர்கள் மாறிவிட்டார்கள். சமூக ஊடகங்களிலும், வீடியோ அழைப்புகளிலும் மக்கள் மூழ்கி கிடக்கின்றனர்.

அதனால் நெட் டேட்டா குறைய, அடிக்கடி ரீசார்ஜ் செய்ய செல்போன் நிறுவனங்கள் வருவாயில் எந்த பாதிப்பும் இல்லை. சொல்லப்போனால் 30 சதவீத வருவாய் உயர்ந்துள்ளதாம். அதிலும் பல நிறுவனங்கள் கொரோனா பீதிக்கு இடையில் தங்கள் கட்டணங்களை உயர்–்த்தி கொள்ளையடித்தது தனிக்கதை

செல்போன் ஏற்றுமதி குறைந்தது: மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த நிதியாண்டில் செல்போன் ஏற்றுமதியில் லேசான பாதிப்பு ஏற்பட்டது. அதாவது 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பீடுகையில் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 3சதவீத ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்த நிதியாண்டில் ஏப்ரல், மே மாதம் என முதல் 2 மாதங்கள் போக்குவரத்து முற்றிலும் தடை பட்டுள்ளதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

177 பில்லியன் டாலர்

இந்தியாவில்  தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் 2019-20ம் ஆண்டின் வருவாய் 177 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது ஆண்டுக்கு 6.1 சதவீதம் வளர்ச்சியடைந்து 2025ம்ஆண்டு 350பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கொரானாவுக்கு பிறகு   இந்த இலக்கு மாறும் என்கிறார்கள்.

Related Stories:

>