கொமோடோ டிராகன்

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

* ஜப்பானின் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு  வீசி 70 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாக ஜப்பானுக்குச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆவார்.

*தென் பசிபிக் கடலில் Palmerston Atoll என்ற தீவில் உள்ளவர்களில் பலர் Marsters என்ற பெயரை தங்கள் முதல் பெயராக வைத்துள்ளனர்.

*இணையதள விளை யாட்டினை  சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ள முதல் மாநிலம் நாகலாந்து ஆகும்.

*இந்தியாவில் 1 கி.கி. உமி நீக்கிய அரிசியை உற்பத்தி செய்ய 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. உலகளவில் இது சராசரியாக 2 ஆயிரத்து 173 லிட்டராக உள்ளது.

*சிட்னியில் ஆஸ்திரேலிய நாயான ப்ளூயி(1910 - 1939) தன்னுடைய 29 வயது 5 மாதத்தில் இறந்தது. இதுவே உலகில் அதிக காலம் வாழ்ந்த நாயாகும். நாயின் சராசரி வாழ்நாள் 8 -15  ஆண்டுகளாகும்.  ப்ளூயி நாயின் வாழ்நாளை மனிதனோடு ஒப்பிட்டால், 164 ஆண்டுகள் வாழ்ந்ததற்குச் சமம்.

1919 இல் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்திய கர்னல் டையரின் தந்தைதான் 1855 ஆம் ஆண்டு ஓல்ட் மங்க் ரம்மை

கண்டுபிடித்தவர்.

*மோகன்தாஸ் காந்தி, தாமஸ் கார்லைல் எழுதிய ‘On Heroes: Hero-worship, and the Heroic in History’  என்ற நூலைப் படித்த பிறகே முகமது நபியைப் போற்றும் அபிமானி ஆனார்.

*பெரிய பல்லியான கொ மோடோ டிராகன்கள்  இந்தோனேசியாவின் கொமோடோ, ரின்கா, ஃப்ளோரெஸ் தீவுகளில்  அதிகம் காணப்படுகின்றன.

*முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்ற ரீதியில் பல்கலைக்கழகக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் சிறப் பைப் பெற்றார். இவர், தான் படித்த இப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தொகுப்பு: க.ரவீந்திரன்

Related Stories: