கர்நாடகாவில் முதல்முறையாக பிளாஸ்மா சிகிச்சையில் நோயாளி குணமடைந்தார்

பெங்களூரு:  கர்நாடகாவில் ஹூப்பள்ளியில் உள்ள  கிம்ஸ் மருத்துவமனை இயக்குனர்  ராமலிங்கப்பா கூறியதாவது: கொரோனா பாதித்தவர்கள் சிகிச்ைசயில் குணமடைந்தவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.  அவரது நோய் எதிர்ப்பு அணுக்களை பிரித்து,  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா எனப்படுகிறது.  இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி  சிகிச்சைக்கு பின்னர்  குணமடைந்தார். அவரிடம் பேசி சம்மதிக்க வைத்து  பிளாஸ்மாவை தானமாக பெற்றோம். அதை மும்பையில் இருந்து வந்த 64 வயது  நோயாளிக்கு செலுத்தி சிகிச்சை அளித்தோம். அவர் தற்போது குணமடைந்துள்ளார் என்றார்.இம்மாநிலத்தில் பிளாஸ்மா சிகிச்சையில் நோயாளி குணமடைந்தது இதுவே முதல்முறை. இதற்கு முன், பெங்களூருவில் பிளாஸ்மா  சிகிச்சை அளித்தும் நோயாளி ஒருவர் இறந்தார்.

Related Stories: