திகார் சிறையில் முதல்வர் கெஜ்ரிவாலுடன் மனைவி சுனிதா சந்திப்பு

புதுடெல்லி: திகார் சிறையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா மற்றும் மாநில அமைச்சர் அடிசி ஆகியோர் சந்தித்து பேசினர். டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று முன்தினம் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை சிறை நிர்வாகம் மறுத்தது. இந்நிலையில், கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, சுனிதா மற்றும் மாநில அமைச்சர் அடிசி ஆகியோர் பிற்பகலில் திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்திக்க உள்ளார்.

The post திகார் சிறையில் முதல்வர் கெஜ்ரிவாலுடன் மனைவி சுனிதா சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: