காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று கூடுகிறது..!!

டெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. பெங்களூருவில் குடிநீர் பிரச்சனையால் கூடுதல் நீர் தேவை என்பதால் தொடர்ந்து தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. கர்நாடக அணைகளில் நீர் இருப்பு உள்ளதால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே-ல் கர்நாடகம் தர வேண்டிய 10 டி.எம்.சி. காவிரி நீரை முழுமையாக திறந்து விட தமிழ்நாடு அரசு கடந்த 4ம் தேதி வலியுறுத்தியது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 7.3 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும்.

2 மாதங்களிலும் 2.3 டிஎம்சி டி.எம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு 95-வது கூட்டம் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் கூடுகிறது. தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்கிறார். காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 4-ம் தேதி நடந்த கூட்ட உத்தரவுபடி கர்நாடகம் நீர் திறக்கவில்லை என இன்றைய கூட்டத்தில் தமிழக அரசு புகார் செய்ய உள்ளது. மேலும், எஞ்சிய 5 டி.எம்.சி நீரை உடனே திறக்கவும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று கூடுகிறது..!! appeared first on Dinakaran.

Related Stories: