சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 வரை நடத்தப்படும்: மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற ஜூலை 1ம் முதல் ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சிபிஎஸ்இ 10ம், 12ம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை 15ம் தேதிக்குள் முடித்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கான பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் பள்ளித் தேர்வுகள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் சிபிஎஸ்இ தேர்வும் அடங்கும். கடந்த பிப். 24-ம் தேதி தொடங்கி ஏப். 14-ம் தேதி வரை சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தேர்வு நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி பிப்.24-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக முதற்கட்டமாக சிபிஎஸ்இயின் கீழ் செயல்படக்கூடிய அனைத்து பள்ளிகளிலும் நடைபெற இருக்கக்கூடிய தேர்வுகள் தற்காலிகமாக முதல் முறையாக ஒத்திவைக்கப்பட்டன. அதன் பின்பு மார்ச் மாதம் 2-வது வாரத்திற்கு பின் நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்ததை ஒட்டி அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு பின்பு நடத்தப்படும் என்று முதலில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது. தற்போது தொடர்ச்சியாக மே 17-ம் தேதி வரை ஏற்கனவே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஊரடங்கு முழுவதும் முடிந்ததன் பின்பாக ஜுலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் இந்த 10, 12-ம் சிபிஎஸ்இ  வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: