சென்னை: இந்தியாவுக்கு வர முடியாததால் நியூஜெர்சியிலிருந்து வீடியோ வெளியிட்டு கதறி அழுதுள்ளார் நடிகை அங்கீதா. பிரசாந்த் ஜோடியாக லண்டன், சுந்தர்.சி இயக்கிய தகதிமிதா படங்களில் நடித்தவர் அங்கீதா. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சியில் கணவருடன் வசித்து வருகிறார். ஆண்டுதோறும் நாடு திரும்பி, சில மாதங்களுக்கு தனது பெற்றோர் வீட்டுக்கு அங்கீதா வந்துவிடுவார். ஆனால் இம்முறை அதுபோல் வரமுடியவில்லை எனக் கூறும் அவர், நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது: நியூஜெர்சியில் தங்கியிருக்கிறேன். அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. கொரோனா நோயாளிகளால் அனைத்து மருத்துவமனைகளுமே நிரம்பி விட்டன.