பொது இடங்களில் எச்சில் துப்ப தடை

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘புகையிலை, வெற்றிலைப் பாக்கு போடுவதால் எச்சில் துப்ப தூண்டும். எனவே,  பொது இடங்களில் அவற்றை பயன்படுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசு தடை விதிக்க வேண்டும். ஏனென்றால், பொது இடங்களில் எச்சில் துப்புவது கொரோனா தொற்றை அதிகரிக்கக் கூடும். இதனைத் தடுக்க தொற்று நோய் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. பீகார், ஜார்கண்ட், தெலங்கானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அரியானா, நாகலாந்து, அசாம் உள்ளிட்ட மாநிலங்கள், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்தவும், எச்சில் துப்பவும் ஏற்கனவே தடை விதித்து உத்தரவிட்டுள்ளன.

Related Stories: