ஹமாஸ் பிடியில் இருக்கும் பணய கைதிகளை விடுவிக்க கோரி போலீசாருடன் பொதுமக்கள் மோதல்: இஸ்ரேல் பிரதமர் பதவி விலக கோரிக்கை

ஜெருசலேம்: காசா மீது கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்தும் போரில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் 250 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதில்,100 க்கும் மேற்பட்டோர் இன்னும் ஹமாஸ் பிடியில் உள்ளனர்.

இந்நிலையில்,ஹமாஸ் பிடியில் இருக்கும் பணய கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி அரசை வலியுறுத்தி இஸ்ரேலில் நேற்று போராட்டம் நடந்தது. அஷ்டோட் என்ற இடத்தில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இதில் பணய கைதிகளை மீட்க தவறிய பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டுமென கோஷம் எழுப்பினர். இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

 

The post ஹமாஸ் பிடியில் இருக்கும் பணய கைதிகளை விடுவிக்க கோரி போலீசாருடன் பொதுமக்கள் மோதல்: இஸ்ரேல் பிரதமர் பதவி விலக கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: