விவசாய பொருட்கள் நேரடி கொள்முதல்சிறு விவசாயிகளுக்கு 10000 கடனுதவி: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, பழங்கள் போன்ற விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வக்கீல் சங்க நூலகர் ஜி.ராஜேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் விவசாயிகளின் நலனுக்காக அரசு அறிவித்துள்ள சலுகைகள் குறித்து விரிவாக விளம்பரம் செய்ய தமிழக அரசுக்கு  உத்தரவிட்டிருந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கடன் உதவி வழங்க அரசு முன்வரவேண்டும்.

விவசாய விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய பொருட்களை விற்பனை செய்வதில் இடைத்தரகர்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன், இது தொடர்பாக தமிழக வேளாண் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். பிறகு நீதிபதிகள், மதுராந்தகம் பகுதியில் நெல் விவசாயிகளிடம் உரிய நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கான விலையை அரசு தரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: