வாலாஜாபாத்: கொரோனா பாதிப்பை தடுக்கும் நடவடிக்கையாக தனியார் அமைப்பு சார்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி, தனியார் தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் ஒருங்கிணைந்து, பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பக்கம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் கபசுரக் குடிநீர் சூரனம் செய்முறை விளக்கத்துடன் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டது.