பீனிக்ஸ் மாலில் வேலை பார்த்த 3 பேருக்கு கொரோனா: மார்ச் 10-17-ம் தேதிகளில் அங்கு சென்றவர்கள் அறிகுறி இருந்தால் தகவல் தெரிவிக்கவும்...சென்னை மாநகராட்சி அறிக்கை

சென்னை: சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் கடையில் வேலை பார்க்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளள்து. அங்கு வேலை பார்த்த அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பீனிக்ஸ் மாலுக்கு மார்ச் 10-ம் தேதி முதல் மார்ச் 17-ம் தேதி வரை சென்றவர்கள், அதிலும் குறிப்பாக லைப்ஸ்டைல் கடைக்கு சென்ற வாடிக்கையாளர்கள், மற்ற கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் என அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்ட 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை  பீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் கடையில் வேலை பார்க்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளள்து என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது; கடையின் அனைத்து ஊழியர்களும் எங்கள் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். யாரும் தேவையில்லாத அச்சம் கொள்ள வேண்டாம்.

அக்கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் இதர விவரங்களை  கடையின் டேட்டாபேஸ் மூலம் கண்டறிந்து வருகிறோம்”என்று தெரிவித்தார். எனவே, அந்தக் கடையுடன் தொடர்புடைய அனைவருக்கும் தனித்தனியாக தொடர்பு கொண்டு மேற்படி ஆலோசனைகளை அரசு அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமிலில் இருப்பதால், அனைத்து வணிக வளாகங்களும் பூட்டப்பட்டுள்ளன. இதனால், சென்னை பெருநகரில் வசிக்கும்  பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தால் 044 25384520, 044 46122300 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: