இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 370 ஆக உயர்வு: கிருமி நாசினி, முக கவசத்திற்கு விலை நிர்ணயித்தது மத்திய அரசு

டெல்லி: சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி நாட்டில் கொரோனா கோரத் தாண்டவம் நடத்தி வருகிறது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் பிரிட்டன், ஆஸ்திரேலியா இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,025 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,892 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு நாடு முழுவதும் 370-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று இருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில், கொரோனாவால் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தோற்று வைரசில் இருந்து தப்புவதற்காக மக்கள் உபயோகிக்கும் முக கவசம், கைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தும் கிருமி நாசினி உள்ளிட்டவைக்கு மத்திய அரசு விலை நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் வெளியிட்ட அறிவிப்பில், 2 அடுக்கு முக கவசம் 8 ரூபாய்க்கும், 3 அடுக்கு முக கவசம் ரூ.10 க்கு விற்பனை செய்ய வேண்டும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 200 மில்லி பாட்டிலில் அடைக்கப்பட்ட கிருமி நாசினி விலை 100 ஜூன் 30 வரை இதே விலை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்து மத்திய அரசு கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: