அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் முடிந்த பின் மீண்டும் மீண்டும் மனுதாக்கல் செய்வதா? : கடும் கண்டிப்புடன் நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் மனு தள்ளுபடி

டெல்லி : நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷ் சிங் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்கள், ஆவணங்களை சிபிஐக்கு வழங்க கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கின் பின்னணி

*டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், முகேஷ்குமார் சிங், பவன்குப்தா,  வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய  நால்வருக்கும் டெல்லி  நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

*இவர்கள், சட்ட விதிகளை பயன்படுத்தி நீதிமன்றத்திலும், ஜனாதிபதிக்கும் மாறி, மாறி மனு அனுப்பி வந்த நிலையில், தற்போது அனைத்தும் முடிவடைந்து நாளை இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

முகேஷ் சிங் புதிய மனு

இந்நிலையில் நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷ் சிங் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்கள், ஆவணங்களை சிபிஐக்கு வழங்க கோரி முகேஷ் சிங் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் முடிந்த பின்னர் மனுதாக்கல் செய்வதா என்று குற்றவாளிகள், வழக்கறிஞர்களை கண்டித்து மனுவை தள்ளுபடி செய்தது.

Related Stories: