பிட்ஸ்

நன்றி குங்குமம் முத்தாரம்

‘ஜென்டில்மென் ஒன்லி லேடீஸ் ஃபர்பிடன்’ என்ற விதிமுறையின் முதல் எழுத்துகளையே பெயராகக் கொண்டு, ஸ்காட்லாந்தில் அறிமுகமான விளையாட்டுதான் கோல்ஃப். பண்டைய சீனாவில் நோயாளிகள் குணமடைந்தால் மட்டுமே வைத்தியர்கள் பணம் பெறுவார்கள். நோயாளி இறந்து விட்டாலோ, மருத்துவர் பணம் தரவேண்டும்!இரண்டாம் உலகப் போரின்போது பெர்லினில் போடப்பட்ட முதல் குண்டில் ஒரு யானை மட்டுமே இறந்தது. நிஜ உலகத்துக்கும் மேலோகத்துக்கும் இடையே உள்ள மெல்லிய சுவர்தான் பூமியின் தரை என நம்பினார்கள் மயன் நாகரிகத்தினர்.கடலில் மிதந்து கொண்டிருக்கும் தட்டுதான் பூமி எனக் கருதினார்கள் பண்டைய கிரேக்கர்கள்! கடந்த 3500 ஆண்டுகளில் 230 ஆண்டுகள் மட்டுமே உலகம் முழுக்க அமைதி நிலவியிருக்கிறது.

இருவரிடமும் ஆயுதம் இல்லை என்று உணர்த்துவதற்காகத்தான் புதியவர்களிடம் கை குலுக்கும் பழக்கம் உருவானது. எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் எப்போதுமே வடக்கு நோக்கியே உறங்குவார். சிவில் யுத்தத்தில் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை, மற்ற அனைத்து யுத்தங்களிலும் இறந்த அமெரிக்கர்களை விட அதிகம். பார்வைக் கோளாறுகளுக் கான கண்ணாடி 700 ஆண்டுகளாக அணியப்படுகிறது.

Related Stories: