மாநிலங்களவை தேர்தலில் சிந்தியாக்கு ஆதரவு அளிக்க பெங்களூரு பயணம்; 19 எம்எல்ஏ-க்கள் தொடர்பில் உள்ளனர்; போபால் திரும்புவார்கள்...காங்கிரஸ் நம்பிக்கை

போபால்: ஜோதிராதித்யா சிந்தியா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தால் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் கமல்நாத் பக்கம் திரும்பி விடுவார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில்  தலைநகர் போபாலில் மாநில காங்கிரஸ் தலைவரும், மத்திப்பிரதேச முதல்வருமான கமல்நாத் தலைமையில் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 97 பேரும், சுயேட்சை எம்எல்ஏ-க்கள் 3 பேரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில்  முதல்வர் கமல்நாத் தலைமையின் கீழ் பணியாற்றவும், ஜோதிராதித்யா சிந்தியா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ஆதரிப்பதும் முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் மேலிட தலைவர் ஷோபா ஒசா, ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் கமல்நாத்துடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார். சுயேட்சைகள் உட்பட அனைவரும்  கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒற்றுமையாக இருந்து போராட கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். மாநிலங்களவை பதவிப்பெறவே சிலரை சிந்தியா அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சிந்தியா பாஜகவுக்கு சென்றுவிடுவார்  என்பதால் அவர்கள் கோபம் அடைந்துள்ளனர். இதனால், சிந்தியா உடன் சென்ற எம்எல்ஏக்கள் முதல்வர் கமல்நாத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

மாநிலங்களவை தேர்தலில் ஜோதிராதித்யா சிந்தியாக்கு ஆதரவு கொடுப்பதற்காகவே பெங்களூரில் தங்கியுள்ளதாக சில எம்எல்ஏ-க்கள் தெரிவித்துள்ளனர். ஜோதிராதித்யா சிந்தியா பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தால் மீண்டும் முதல்வர்  கமல்நாத் பக்கம் திரும்பி விடுவோம் என்று கூறியுள்ளனர். பெங்களூரில் தங்கியுள்ள 19 எம்எல்ஏக்களில் 10 பேர் போபால் திரும்பி விடுவார்கள் என்பது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையாகவுள்ளது. தற்போது, போபாலில் உள்ள 97 காங்கிரஸ்  எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: