போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததற்காக பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது

பராகுவே: போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததற்காக பராகுவே காவல்துறையினரால் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது செய்யப்பட்டார். பிரேசிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும், 2005 ஆம் ஆண்டு பாலோன் டிஓர் விருதையும் வென்றவர். பிரேசில் 2002 ஆம் ஆண்டு  உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர். இந்த நிலையில்  ரொனால்டினோ  தென் அமெரிக்க நாட்டிற்குள் நுழைய தவறான ஆவணங்களைப் பயன்படுத்தியதாக பராகுவேயில் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு ரொனால்டினோவும் அவரது சகோதரர் ராபர்டோவும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

போலி பாஸ்போர்ட் தொடர்பான புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் 2015ம் ஆண்டு குய்பா ஏரியில் பாதுகாப்பு பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடி வலையை கட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு தண்டனையாக இருவருக்கும் சேர்த்து 8.5 மில்லியன் டாலர் அபாரதம் விதிக்கப்பட்டது. அபாரத்தை செலுத்த தவறியதால் பிரேசில் உயர் நீதிமன்றம் ரொனால்டினோவை நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தடுக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடதக்கது. பிரேசிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும் வென்றுள்ளார். மேலும், உலகப் புகழ் பெற்ற பார்சிலோனா அணியிலும் இவர் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: