அமைச்சரவை செயலாளர் உத்தரவு இந்தா பாருங்கய்யா இனிமே... தனித்தனியா அச்சிட வேண்டாம்...

புதுடெல்லி: மத்திய அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கு, அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான காலண்டர், டைரி அச்சிடும் பொறுப்பு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் அரசின் மற்ற துறைகள் சொந்தமாக காலண்டர், டைரி அச்சடித்து அரசு நிதியை வீணாக்க வேண்டாம். டிஜிட்டல் தொழில்நுட்பம் அதிகரித்துள்ளதால், காகித பயன்பாடு குறைக்கப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து துறைகளும், தங்களுக்கு தேவையான காலண்டர் மற்றும் டைரிகளின் எண்ணிக்கையை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு கட்டண அடிப்படை இவை வழங்கப்படும். டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பாக, காலண்டர், டைரி அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: