மஹிந்திரா இகேயூவி100

மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து ஆச்சரிய பரிசாகவே இந்த இ-கேயூவி 100 மின்சார கார் காட்சியளிக்கிறது. இந்த மின்சார முன் மாதிரி மாடல், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, விற்பனைக்கு கொண்டு வரும் விதமாக நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா இ-கேயூவி காரை காட்சிப்படுத்தியது. இந்த காருக்கு யாரும் எதிர்பாராத மலிவு விலையாக ₹8.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த மின்சார கார் கேயூவி 100 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 40kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, 53 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இந்த கார், ஒரு சிங்கிள் சார்ஜில் 120 கிமீ ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டுள்ளது. இதற்காக இணைக்கப்பட்டுள்ள 15.9 kWh லித்தியம் அயன் பேட்டரியை சார்ஜ் செய்ய குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் வரை தேவைப்படும்.

Related Stories: