அய்னோவின் அதிரடி!

நன்றி குங்குமம் முத்தாரம்

பின்லாந்தின் பிரதமராக சன்னா மரின் பொறுப்பேற்ற பிறகு அதிரடி யான மாற்றங்களைச் செய்து வருகிறார். வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும் என்று ஆச்சர்யமான அறிவிப்பைத் தந்து அதிர வைத்தார். இப்போது அவரது அமைச்சரவையில் இருக்கும் சமூக சீர்திருத்தம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரான அய்னோவும் புதிதாக ஒரு அறிவிப்பைத் தந்துள்ளார். குழந்தைப்பேறு சமயத்தில் பெண்களுக்கு வருமானத்துடன் ஏழு மாதங்களுக்கு விடுமுறை என்பது பின்லாந்தில் பின்பற்றப்படும் ஒரு விதிமுறை.

இப்போது இதிலும் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று மனைவிக்கும் பிறந்த குழந்தைக்கும் உதவியாகவும் உறுதுணையாகவும் இருப்பதற்காக கணவனுக்கும் குழந்தைப்பேறு விடுமுறையை வருமானத்துடன் அளிக்கப்போவதாக அய்னோ டுவிட்டியிருக்கிறார். இந்த அதிரடி யோசனை வைரலாகிறது. ‘‘இந்த விடுமுறை பெற்றோர்களிடம் நல்ல மாற்றத் தைக் கொண்டு வரும். அது குடும்ப உறவுகளை இன்னும் வளமாக்கும்...’’ என்கிறார் அய்னோ.

Related Stories: