ஹம்பி சிதிலங்கள்

நன்றி குங்குமம் முத்தாரம்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று பேர் 4000 ரன்களுக்கு மேல் அடித்து 350 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்ரவுண்டர்களாக சாதித்து உள்ளனர். அவர்கள், இந்தியாவின் கபில்தேவ், இங்கிலாந்தின் இயான் போத்தம், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி.  பல தலைமுறைகளாக காலணி தைப்பதில் ஈடுபட்டு வந்த குடும்பத்தைச் சேர்ந்த டூமாஸ், அன்டோனியன், அன்னா ஆகிய சகோதரர்கள் 1894ல் Zlin என்ற நகரில் 10 முழுநேரப் பணியாளர்களோடு ஒரு காலணி தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தனர்.  செக் குடியரசில் உள்ள இந்த ஊர் அன்று  ஆஸ்ட்ரோ - ஹங்கேரிய சாம்ராஜ்யத்தில் இருந்தது. இந்த நிறுவனமே ‘பாட்டா’ நிறுவனமாக வளர்ந்து 70 நாடுகளில் 5000 சில்லறை விற்பனைக் கடைகளோடு திகழ்கிறது.ஜாதகக் கதைகள் என்ற நீதிக்கதைகள் கி.மு.300ல் ‘பாலி’ மொழியில் எழுதப்பட்டவை.

கண்டாரீய மகாதேவர், சதுர்புஜன், வாமனன், பார்சுவநாதன், லக்ஷ்மணன்,  ஆதிநாத ஜெயின், வராஹர் போன்ற கோயில்கள் அடங்கிய தொகுப்புதான் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள கஜுராஹோ கோயில்கள் ஆகும். யுனெஸ்கோ அங்கீகரித்த உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும். உலகப் பாரம்பரியச் சின்னமான ஹம்பி சிதிலங்கள் கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் உள்ளன. 1565ல் தலைக்கோட்டை படையெடுப்பில் இவை கடும் அழிவிற்கு உள்ளாயின. மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்கள் ‘அஜந்தா, எல்லோரா குகைகள்’ என இணைத்து அழைக்கப்பட்டாலும் இரண்டிற்கும் இடையே 100 கி.மீ. தொலைவு உள்ளது. இவை இரண்டும் தனித்தனி உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அஜந்தா அவுரங்காபாத் மாவட்டத்தில் லினாபூர் என்ற கிராமத்திலும் எல்லோரா, வேருல் என்ற கிராமத்திலும் உள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைசென் மாவட்டத்தில் உள்ள பீம்பேத்கார் கற்குகைகள் மீஸோலித்திக் காலகட்டத்தைச் சேர்ந்தவை. இக்காலத்திய ஓவியங்கள் இங்கே காணப்படுகின்றன. இவை இந்தியாவில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்களில் மிகவும் பழமையானவை.1975ம் ஆண்டு இங்கிலாந்தின் பக்ஸ்டனில்  லங்காஷயர் மற்றும் டெர்பிஷயர் அணிகளுக்கு இடையே நடந்த இங்கிலீஷ் கவுன்ட்டி கிரிக்கெட் பந்தயம் பனிப் பொழிவு காரணமாக கைவிடப்பட்ட ஒரே முதல்தர பந்தயமாகும். மனித அல்லது விலங்கு வடிவம் கொண்ட மழைநீர் வடிவங்கள், தொடர் உருவகம் சார்ந்த சிற்பங்கள், வினோதமான கற்பனை கொண்ட உருவங்கள், போர்க்களக் கருவிகளின் சிற்பங்கள், இந்தியாவின் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் மார்பளவு உருவங்கள் ஆகியவற்றை மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் பார்க்கலாம். விக்டோரியா டெர்மினஸ் என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம், யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று.

இந்தியாவில் குளிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மற்றும் மத்தியகால படிக்கட்டுகளுடன் கூடிய கிணறுகள் பல உள்ளன. இவற்றில் குஜராத்தில் பதான் நகரில் உள்ள ராணி-கி-வாவ் (ராணி குளிக்கும் கிணறு) மட்டுமே உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. உஸ்தாத் அஹமத் லஹோரி, உஸ்தாத் இஸா எனும் இரு பாரசீக கட்டிடக் கலைஞர்களே தாஜ்மஹாலைக் கட்டினர். வியட்நாமில் உள்ள ஹோ சி  மின் (Ho Chi Minh) நகரம் முன்பு சைகோன் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. வடக்கு, தெற்கு வியட்நாம்கள் தனித்தனியாக இருந்தபோது ஹோ சி மின் நகரம், தெற்கு வியட்நாமின் தலைநகராகும். 1976ல் இரு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன.

தொகுப்பு: க.ரவீந்திரன்

Related Stories: