நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் 53 ஏக்கரில் ரூ.77 கோடி செலவில் பிரமாண்ட உணவுப் பூங்கா : தமிழக நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். மேலும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது

என்றும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.  மேலும் அவர் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு...

*ஊரக உள்ளாட்சிகளில் முதலமைச்சரின் கிராம தன்னிறைவு வளர்ச்சி திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டம் விரைவில் அறிமுகம்

*எல்ஐசியுடன் இணைந்து புரட்சித் தலைவி அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம்

*ரூ.25 கோடியில் சிட்லபாக்கம் ஏரி மறுசீரமைக்கப்படும்

*புதிதாக 45 உழவர் - உற்பத்தியாளர்கள் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்

*பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கான மாநில அரசின் பங்களிப்பு ரூ.724 கோடியாக உயர்வு

*ரூ.1845 கோடி செலவில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர்ப் பாசன வசதி பெறும்

*ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்

*சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.218 கோடி செலவில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்

*நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் 53 ஏக்கரில் ரூ.77 கோடி செலவில் பிரமாண்ட உணவுப் பூங்கா

Related Stories: