வைரல் சம்பவம்

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

இணையத்தில் வைரலாகும் சம்பவங்கள் எல்லாவற்றுக்குமே பொதுவாக ஒரு தன்மை இருக்கிறது. அது எதாவது ஒரு வழியில் மக்களை நெகிழ்விக்கும்படி இருப்பதுதான் அந்த பொதுத்தன்மை. அதனால்தான் அந்தப் பதிவு லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு பகிரப்படுகிறது. இந்தச் சம்பவமும் அப்படியான ஒரு நெகிழ்வுத்தன்மை வாய்ந்ததுதான்.

வேலிக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார் ஒரு இளைஞர். வேலிக்குள் இருக்கும் குட்டி யானை ஒன்று அந்த பெயிண்டரிடம் விளையாட்டு காட்டுகிறது. வேலியைத் தாண்டவும் முயற்சிக்கிறது. அந்தப் பெயிண்டரிடம் வாஞ்சையுடன் தும்பிக்கையை நீட்டுகிறது. இந்த ஆச்சர்ய சம்பவம் வீடியோவாக்கப்பட்டு டுவிட்டரில் வெளியாகி வைரலாகிவிட்டது.

Related Stories: