சிறுமி பாலியல் பலாத்காரம்: இருவருக்கு இரட்டை ஆயுள்: சேலம் போக்சோ கோர்ட் தீர்ப்பு

சேலம்: சேலம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இவர்  டியூஷனுக்கு செல்லும் போது தலைவாசல் காமாக்காபாளையத்தை சேர்ந்த அன்புதுரை, ஏத்தாப்பூர் பாய் என்ற பாஸ்கர் (50), மீசைக்கார ராமசாமி (70) ஆகியோர், சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி டிவி கடையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2014ல் ஆத்தூர் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இடையில் மீசைக்கார ராமசாமி இறந்து விட்டார். நீதிபதி முருகானந்தம் வழக்கை விசாரித்து அன்புதுரை, பாய் என்கிற பாஸ்கர் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 55 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

Related Stories: