கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் அடுத்தடுத்து மூன்று கடைகள் உடைப்பு: 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உதிரிபாகங்கள் கொள்ளை

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பஜார் பகுதியில் மளிகை கடை, காய்கறி கடை, பர்னிச்சர் கடை, பூக்கடை, கோயில்கள் ஸ்வீட் கடை, நகைக்கடை, சலூன் கடை, சூப்பர் மார்க்கெட், டீக்கடை, மருந்து கடை உள்ளிட்ட பல்வேறு விதமான 200க்கும் மேற்பட்ட கடைகள் இருந்து வருகிறது.

இந்த கடைகளுக்கு கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், ரெட்டம்பேடு, மாதர்பாக்கம், அயநெல்லூர், குருவாட்டுச்சேரி, புதுவாயில், பெருவாயில், பூவலம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மக்கள் தங்கள் தேவைகளுக்காக மேற்கண்ட பொருட்களை வாங்குவதற்கு வருவதும் போதுமாக பயன்படுத்தி வந்த நிலையில் தனிநபர் மற்றும் கடைகளிலிருந்து கடை உடைத்து கொள்ளை மற்றும் இருசக்கர வாகனத்தில் இருந்து பணம் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் தனிப்படை அமைத்து ஏற்கனவே குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள சரண்யா நகரைச் சேர்ந்த நவீன் (28) கூலீஸ் கடை நடத்தி வருகிறார், அதேபோல் பஜார் பகுதியைச் சேர்ந்த குமார்(48) செல்போன் கடை நடத்தி வருகிறார், ராஜகோபால் (56) மளிகை கடை நடத்தி வருகின்றனர். நேற்று வழக்கம்போல் வியாபாரம் முடித்துவிட்டு கடையை பூட்டு சென்றனர். இன்று காலை 6 மணி அளவில் அவ்வழியாக வந்த சமூக ஆர்வலர்கள் கடையின் முன்பு பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த போலீசார் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களை தொலைபேசி மூலம் வர வைத்தனர். அப்போது செல்போன் கடையில் 1000 ரூபாய் பணம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் உதிரி பாகங்கள், மற்றும் கூல்டரிங்ஸ் கடையில் 8 ஆயிரம் ரூபாய் பணமும், மளிகை கடையை உடைத்து முயற்சி செய்து தெரியவந்தது.

பின்பு கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரெட்டம்பேடு சாலையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் பார்த்து போது அதில் இரண்டு மர்ம நபர்கள் உள்ளே செல்லும் காட்சி வெளியாகி உள்ளது இதுகுறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் அடுத்தடுத்து மூன்று கடைகள் உடைப்பு: 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உதிரிபாகங்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: