பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: பூக்கடை பகுதியில் உள்ள அரசு மருவத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாண கோணத்தில் நின்றுகொண்டு சைகையை காட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்து விசாரித்தபோது போதையில் நின்றது தெரிந்தது. சென்னை பூக்கடை முத்துசாமி பாலம் அருகில் அரசு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை விடுதி அருகேயுள்ள பழைய கட்டிடத்தில் நிர்வாண கோலத்தில் மர்மநபர் ஒருவர் நின்றுகொண்டு பெண்கள் விடுதியை பார்த்த படி நின்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள், விடுதி வார்டனிடம் தெரிவித்தனர். இதையடுத்து வார்டன், பூக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழைய கட்டிடத்தில் நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து உடை அணிவித்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், சென்னை கொண்டித்தோப்பு முனுசாமி தெருவை சேர்ந்த ரவிக்குமார் (41) என்பதும், மதுபோதையில் சைக்கோபோல் நிர்வாணமாக நின்றுகொண்டு பெண்கள் விடுதியை நோக்கி சைகைகாட்டியதும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் விடுதி மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ரவிக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் புகுந்து செல்போன்களை திருடி சென்றார். தற்போது ஒரு வாலிபர் பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகைகாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதிக்கு எதிரேயுள்ள முத்துசாமி பாலம் அருகே போதை ஆசாமிகள் அடிக்கடி நிர்வாணமாக நிற்பார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

The post பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: