சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவேறவில்லையெனில் போராட்டத்தை தவிர வேறுவழி தெரியவில்லை: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை நிறைவேறவில்லையெனில் போராட்டத்தை தவிர வேறுவழி தெரியவில்லை. மத்திய, மாநில ஆட்சியர்கள் இணக்கமாக இருப்பதால் கோரிக்கை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பாமக இளைஞர் சங்கம் சார்பில் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் ராமதாஸ்  பேசியதாவது:  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம் போட வேண்டும். 2021ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்ெகடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும்.

அப்படி நடத்த வில்லையென்றால் மாநில அரசே நடத்தும் என்று அழுத்தமாக முதல்வர் சொல்ல வேண்டும்.  சாதிக்கு ஏற்றவாறு கல்வி, வேலைவாய்ப்பு வழங்கதான் கேட்கிறோம். கோரிக்கை நிறைவேற வில்லையெனில் கடுமையான போராட்டத்தை செய்ய வேண்டியதை தவிர வேறுவழி தெரியவில்லை. மத்திய, மாநிலத்தில் இருக்கும் ஆட்சிகள் நம்முடன் இணக்கமாக இருக்கிற நிலையில் இந்த கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: