பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத்துறை ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு 10ம் தேதி ஆர்ப்பாட்டம்: நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கம் ஆதரவு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத்துறை ஊழியர்களின் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக வரும் 10ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்க பொதுச்செயலாளர் மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், சிறப்பு கால முறை ஊதியம் முறையை கைவிட்டு அந்த ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மேலும், ஒரு நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும், கடந்த 2019 ஜனவரியில் போராடிய அரசு ஊழியர்கள் மீது காவல்துறையினரால் போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும், பொய் வழக்கு காரணமாக பல ஊழியர்களுக்கு 17பி, 17இ குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால், பதவி உயர்வின் போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, குற்றச்சாட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 10ம் தேதி அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. அதில், நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் பட்டய பொறியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: