உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா

நன்றி குங்குமம் முத்தாரம்

இதோ உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா திறக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்துவிட்டது என்ற செய்தியைக் கேட்டவுடன் இது ஏதோ ஐரோப்பிய நாட்டில் நடந்திருக்கும் என்று நினைப்போம். ஆனால், இது நடந்தது இந்தியாவில். அதுவும் நம் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் உள்ள பவகாடா தாலுகாவில். இடத்தின் பெயரையே பூங்காவிற்கும் சூட்டிவிட்டனர்.

சூரிய கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் பகுதி பவகாடா என்பதால் இந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில்,  அக்டோபர் 2016-ம் வருடம் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. 2050 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது இதன் நோக்கம்.

Related Stories: