தீவிரவாதம் மீது நடவடிக்கை பாக்.குக்கு ராஜ்நாத் அறிவுரை

புதுடெல்லி: டெல்லியில் நேற்று தொடங்கிய 12வது தெற்கு ஆசிய உச்சி மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ``பிராந்திய அமைதி, பாதுகாப்பு குறித்து ஒரே ஒரு அண்டை நாடு தவிர, பிற அண்டை நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதில்லை என்ற அடிப்படை கொள்கையை பின்பற்றி, அந்நாட்டின் உணர்வுக்கு மதிப்பு அளிப்பதன் மூலமே பிராந்திய அமைதி, பாதுகாப்பை உண்மையிலேயே உருவாக்க முடியும். தீவிரவாதத்தை ஒழிக்க தெற்கு ஆசிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும். மும்பை, பதான்கோட், உரி, புல்வாமா தீவிரவாத தாக்குதல்கள் அண்டை நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்ததற்கு  உதாரணங்கள். தீவிரவாதத்துக்கு ஆதரவும், நிதியும் அளிப்பதை அண்டை நாடு நிறுத்த வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக வெளிப்படையான, நிரூபிக்கத்தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: