கருப்பு-சிவப்பு கலவையில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகிற புதிய ஹிமாலயன் பைக்கை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஹிமாலயன் பிஎஸ்6 பைக் கருப்பு மற்றும் சிவப்பு நிற தேர்வில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பைக் இதற்கு முன்பும் சில முறை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால், இம்முறை இந்த பிஎஸ்6 பைக் டீலர்ஷிப்களிடம் சென்றடைந்துள்ளது. இதனால் ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகளை நாடு முழுவதும் டீலர்ஷிப்கள் ஏற்று வருகின்றனர்.

முன்னதாக, ஹிமாலயன் பிஎஸ்6 பைக் ராக்கி ரெட், ஏரியின் நீலம் மற்றும் க்ராவெல் க்ரே என மூன்று புதிய நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பைக்கில் 411சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்/ஆயில்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்4-க்கு இணக்கமான இன்ஜினுடன் எலக்ட்ரானிக் எரிபொருள் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 அப்டேட்டாக இதன் இன்ஜின் இசியூ ட்விக்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேட்டலிடிக் கன்வெர்ட்டர் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. 24.5 பிஎச்பி மற்றும் 32 என்எம் டார்க் திறன் உள்ளிட்ட இன்ஜின் ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சிறிய அளவிலான ஸ்போக் சக்கரம், எம்ஆர்எப் ட்யூல்-பர்பஸ் டயர் மற்றும் கவனிக்கத்தக்க வகையில் அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் சிறந்த ஆப்-ரோடு பயணத்திற்காக ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பையும் எதிர்பார்க்கலாம். இதனால், இந்த பைக், 10 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரம் வரை விலை அதிகரிப்பை பெற உள்ளது.  தற்சமயம் இந்திய எக்ஸ்ஷோரூமில் 1.79 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: