வி.வி.கிரிக்கு அடுத்தப்படியாக 45 ஆண்டுக்குப் பின் சபரிமலையில் 6ம் தேதி தரிசிக்கிறார் ஜனாதிபதி: கேரள அரசு தீவிர ஏற்பாடு

திருவனந்தபுரம்: முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரிக்கு அடுத்தப்படியாக, சபரிமலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  வரும் 6ம் தேதி தரிசனம் செய்ய இருக்கிறார்.சபரிமலை  ஐயப்பன் கோயிலில் தற்போது மகர விளக்கு கால பூஜைகள் நடந்து  வருகின்றன. இதையொட்டி பல்வேறு  மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். நேற்று  புத்தாண்டு என்பதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி  ராம்நாத் ேகாவிந்த் சபரிமலை ஐயப்பன் கோயிலில்  தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது. . இதற்காக அவர்  வரும் 5ம் தேதி விமானம் மூலம் கொச்சி வருகிறார். அன்று  கொச்சியில் தங்கும்  அவர் மறுநாள் (6ம் தேதி) சபரிமலை சென்று தரிசனம் செய்ய  திட்டமிட்டுள்ளார்.

இது  தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து ேகரள  அரசுக்கு தகவல்  அனுப்பப்பட்டுள்ளது. அதில், தரிசனத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை  செய்யும்படி  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு ஜனாதிபதியை அழைத்து செல்வது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த 1973ல் அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி தான் முதன்முதலாக  சபரிமலையில் தரிசனம் செய்தார். அதன்பிறகு  சபரிமலை வர உள்ள 2வது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: