அமெரிக்காவை அச்சுறுத்தும் உடல் பருமன்

நன்றி குங்குமம் முத்தாரம்

‘‘இன்னும் பத்து வருடங்களில் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் உடல் பருமனால் அவதிப்படுவார்கள்...’’ என் கிறது இங்கிலாந்து மருத்துவப் பத்திரிகை ஒன்று.அமெரிக்காவின் முக்கிய உடல் பிரச்சனையாக மாறி வருகிறது உடல் பருமன். இது இதய நோய், சர்க்கரை நோய், மூட்டு வலி, சில வகையான புற்றுநோய்களுக்கும் காரண மாக இருக்கிறது. இந்த நிலை யில்தான் பாதிப்பேர் உடல் பருமனுக்கு ஆளாவார்கள் என்ற செய்தி அங்கே பீதியைக் கிளப்பியுள்ளது.

பத்து வருடங்களுக்கு மேல் 60 லட்சம் பேரை ஆய்வு செய்து இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றனர். கடந்த 19 வருடங்களில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. 2030-இல் இரண்டில் ஒரு இளைஞர் உடல் பருமனோடு இருப்பார். வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, வேலை செய்யும் முறைதான் இந்த பருமனுக்கு முக்கிய காரணங்கள்.

Related Stories: