உ.பி. போலீசாரின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஆளுநருக்கு பிரியங்கா காந்தி கடிதம்

புதுடெல்லி: உ.பி. போலீசாரின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அம்மாநில ஆளுநருக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 20க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தநிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி எஸ்.ஆர். தாராபுரியைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவரது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி காரில் சென்றார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவிலை. அதனையடுத்து, அருகிலிருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து பிரியங்கா காந்தி சென்றார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர் அவரை வழிமறித்தனர். பின்னர், இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்றார். அப்போதும் அவரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, நான் தாராபூரின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது காவல்துறையினர் என்னைத் தடுத்து நிறுத்தினர். பெண் காவலர்கள் என்னைக் கழுத்தைப் பிடித்து நெறித்து கீழே தள்ளிவிட்டனர் என்று குற்றம்சாட்டினார். இந்நிலையில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு, 14 பக்க கடிதம் ஒன்றை பிரியங்கா காந்தி எழுதியுள்ளார். அதில், குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி. ஆகியவற்றுக்கு எதிராக போராடுபவர்கள் மீதான உ.பி. போலீசாரின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செயல்பட உ.பி. போலீசாருக்கு உடனடி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும், எனவும் பிரியங்கா காந்தி போரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: