''தாதா சாகேப் பால்கே''விருதை பெற்றுக்கொண்டார் நடிகர் அமிதாப் பச்சன்: டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

டெல்லி: டெல்லியில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரைத்துறை சேவையை பாராட்டி தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்டபின் அமிதாப் பச்சன் ஏற்புரை நிகழ்த்தி வருகிறார்.

திரைத்துறைக்கான இந்தியாவின் தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. இதில் திரைத்துறையினர் பங்கேற்று விருதுகளை பெற்றுச்சென்றனர்.

ஆனால் திரைத்துறையினர் உயரிய விருதான ‘தாதா சாஹேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டிருந்த அமிதாப் பச்சன், அந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற அமிதாப் பச்சன், தனக்கான ‘தாதா சாஹேப் பால்கே’ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையில் பெற்றுக்கொண்டார்.

அமிதாப் பச்சன் விருதுகள்:

நூற்றுக்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அமிதாப் பச்சன் தற்போதும் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, மராட்டிய மாநில அரசின் விருதுகள் மற்றும் மத்திய அரசின் தேசிய விருதுகளை பலமுறை பெற்றவரான அமிதாப் பச்சன் மத்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகளாலும் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: