ஓசூர் பகுதியில் ராகி விளைச்சல் அமோகம்

ஓசூர்: ஓசூர் பகுதியில் ராகி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஓசூர் வட்டாரத்தில் தற்போது 1100 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யபட்டுள்ளது. அதே போல் சிறு  தானியங்களான கேழ்வரகு, ராகி, துவரை, காராமணி மற்றும் கொள்ளு உள்ளிட்டவை 3500 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரமாக ஓசூர் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் ராகி நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி தாலுகாவில் ராகி, அவரை, துவரை, சோளம், ஆமணக்கு, சாமை, கொள்ளு  உள்ளிட்ட சிறு தானிய வகைகள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனால்  அதிக லாபம் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: