×

ரிஷபம்

(8.1.2026 முதல் 14.1.2026 வரை)

சாதகங்கள்: பணவரவைக் குறிக்கும் இரண்டாம் இடத்தில் குரு அமர்ந்திருக்கிறார். அவர் அஷ்டமாதிபதி என்றாலும் கூட லாப ஸ்தானத்துக்கும் உரியவர் என்பதால் நிதி வசதிகளில் எந்த பின்னடைவும் இருக்காது. கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். தகவல் தொழில்நுட்பம், பத்திரிகைத் துறையில் எதிர்பார்த்த உயர்வு உண்டு. அஷ்டமத்தில் உள்ள சுக்கிரன் நன்மைகளை செய்வார். அவர் ராசியாதிபதி என்பதும் ஒரு காரணம். எட்டுக்குரிய குரு இரண்டாம் இடத்தில் இருக்கிறார். எட்டாம் இடத்தைப் பார்க்கிறார். வாரத்தின் துவக்கத்தில் பாக்கியஸ்தானத்தில் அமரப்போகும் புதன் சகல நன்மைகளையும் செய்வார். எண்ணியதை எண்ணியபடி முடிப்பீர்கள். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டு.

கவனம் தேவை: பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எட்டாம் இடம் வலுவாக இருப்பதால் எதிர்பாராத தொல்லைகளும் தடங்கல்களும் ஏற்படும். எதிலும் முன் யோசனையுடன் நடந்து கொள்வது நல்லது. சுக ஸ்தானத்தில் கேது இருப்பதால் வண்டி வாகனங்கள் அவ்வப்பொழுது பழுதடையலாம். தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. சொத்து பத்திரங்களில் பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: நரசிம்மரைத் துதியுங்கள். நன்மைகள் நடக்கும்.

Tags :
× RELATED மீனம்