தொழிலாளர் சமூக பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல்

புதுடெல்லி: மத்திய தொழிலாளர்கள் சட்டம் எனப்படும் தொழிலாளர் இழப்பீடு சட்டம், ஓய்வூதிய சட்டம், பிரசவ கால உதவி சட்டம், மருத்துவ உதவி சட்டம், பணிக்கொடை சட்டம் உள்ளிட்ட 9 தொழிலாளர் நலத் தொடர்பான சட்டங்களில் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கான திருத்தங்களை மத்திய அரசு வரையறுத்தது. இதன் மூலம்  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, விபத்து காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் கிடைக்க வழி வகுக்கப்படும். இந்நிலையில், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கான சட்ட திருத்த மசோதாவை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் ேகங்வார் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் கிடைக்கும் நலத்திட்டங்களை பெற தொழிலாளர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயமாகும் என்று திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: