புதிய பெயரில் களமிறங்கும் ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

இந்தியாவின் காம்பேக்ட் செடான் கார் ரகத்தில் முக்கிய போட்டியாளர்களில் ஒன்றாக ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விளங்குகிறது. இந்நிலையில், அனைத்து விதத்திலும் நிறைவை தரும் புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்  உருவாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, தனிநபர் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் அறிமுகமாக உள்ளது. தற்போது இந்த கார், சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கார், பண்டிகை காலத்தில் வந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் அடிப்படையிலான செடான் வெர்ஷனாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் இந்த காம்பேக்ட் செடான் கார் வேறுபடுத்தப்பட்டு  இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய காரில், பூமராங் வடிவிலான எல்இடி பகல்நேர விளக்கு, தேன்கூடு அமைப்பிலான முன்புற கிரில் அமைப்பு, குரோம் பூச்சுடன் கதவு கைப்பிடி, ‘’சி’’ வடிவிலான எல்இடி விளக்குகளுடன் டெயில் லைட் கிளஸ்ட்டர் அமைப்பு, 15 அங்குல  அலாய் வீல், சுறா துடுப்பு வடிவ ஆன்டெனா ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கிறது.ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் டேஷ்போர்டு அமைப்பு இதிலும் பயன்படுத்தப்படுகிறது. 8 அங்குல தொடுதிரை சாதனம், ஆட்டோ கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வென்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி,  ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளில் வருகிறது. தற்போதைய மாடல் ₹5.81 லட்சத்தில் (புதுடெல்லி எக்ஸ்ஷோரூம்) இருந்து கிடைக்கும் நிலையில், புதிய மாடலின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>