தேர்வு குறித்து கலந்துரையாடல் மாணவர்களுக்கு பிரதமர் அழைப்பு

புதுடெல்லி: `பரிக்‌ஷா பி சார்சா’ என்ற பெயரில் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். மன அழுத்தம் இன்றி தேர்வை எதிர்க்கொள்வது எப்படி என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இதில் பங்கேற்பதற்காக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போட்டி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான போட்டி தொடர்பான விவரங்கள் `மை கவர்ன்மென்ட்’ என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்தவர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள். இதில் தேர்வான மாணவர்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மோடியுடன் பள்ளி தேர்வு மற்றும் நுழைவுத்தேர்வை பயமின்றி எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து கலந்துரையாடுவார்கள்.

Related Stories:

>